வணக்கம் நண்பர்களே,
நாகரிக உலகம் தோன்றியது முதல் இன்று வரை உலகில் பெண்களின் முக்கியத்துவம் இன்றியமையாததாக உள்ளது... வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஆண்களுக்கு நிகரான பெண்களின் பங்களிப்பை போற்றும் பதிவாக மகளிர் தினத்தில் இப்பதிவை வெளியிடுகின்றேன்...
அம்மா, நண்பர்கள், மனைவி, பாட்டி, அக்கா, தங்கை, பெரியம்மா, சின்னம்மா, மகள் என பல்வேறு உறவு முறைகளை சுமந்து வாழ்வில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வளர்ந்து வரும் பெண்களுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..
போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் பெண்களை போற்றும் மகளிர் தினமும் உருவாக பெரும் போராட்டம் நிறைந்த கதைகளும் உண்டு..
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை உலகம் முழுவதும் சாதித்து வரும் பெண்களை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது...
மகளிர் தினமும் அதன் வரலாறும்:
19ம் நூற்றாண்டிற்கு முன் வரை பெண்கள் வீட்டில் முடிங்கி இருக்கவேண்டும் என்ற நிலையே நீடித்து இருந்தது, 1860 ஆண்டுகளில் பெரும்பாலும் பெண்கள் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், வெளிவேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்..
இருந்தாலும் ஆண்களுக்கு நிகர மதிப்பும் சம்பளமும் கொடுக்க நிறுவனங்கள் மறுத்தது வந்தனர், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரும் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது..
இந்த பாகுபாடு போக்கை கண்டிக்கும் வகையில் 1900 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதே மகளிர் தினம் உருவானதுக்கான காரணம் ஆனது..
1910ம் ஆண்டு பெண்கள் தங்கள் உரிமைக்காக டென்மார்க் கோபன்ஹேகனில் மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்தினர், இந்த உரிமை போராட்டத்திற்கு பல்வேறு நாட்டு பெண்களும் ஆதரவு தெரிவித்தனர்..ஜெர்மனி புரட்சி பெண் ஆன கிளாரா ஜெட்கினின் பார்வை இந்த உரிமை போராட்டத்தின் மீது கவனம் சென்றதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது, இதை தொடர்ந்து பல பெண் உரிமை போராட்டங்களை நடத்தி வந்தார் கிளாரா..
பெண்களின் உரிமையை போற்றும் வகையில் வருடத்தில் ஏதாவது ஒரு நாளை உருவாக்கவேண்டும் என்று நினைத்தார்.. ஆனால் அவரின் நோக்கம் ஆரம்பகாலத்தில் தோல்வியில் முடிந்தாலும், வருடத்திற்கு வேறு வேறு நாட்களில் மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டது வந்தது...
ரஷ்யாவில் 1917-ம் ஆண்டு பெண் தொழிலாளர்கள் புரட்சி போராட்டம் நடத்தியதன் விளைவாக அப்போது இருந்த மன்னர் ஆட்சியே கவிழ்க்கப்பட்டது...இந்த போராட்டம் பிப்ரவரி மாதம் நடந்தது என்பதால் பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு மகளிர் தினத்தை அனுசரிக்க முடிவு செய்தது, குரியன் காலெண்டரின் படி பிப்பிரவரி மாதத்தின் கடைசி ஞாயிறு மார்ச் மாதத்தில் 8ம் தேதியாக இருந்ததாம்..
இதனை தொடர்ந்து மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் என அனைத்து நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கபட்டு கொண்டாடபட்டு வருகின்றது...
பெண்மையை போற்றிய மகான்களின் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர், பெண்மையை போற்றுவோம் என முழங்கினார்..
மகாகவி பாரதியோ தன் மனைவி செல்லம்மாவை தன் அருகே சமமாக உட்கார வைத்து பெண்களின் சம உரிமைக்கு அடித்தளம் இட்டார்...
இதே நேரத்தில் அக்டோபர் 11ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை பற்றிய எனது முந்தைய பதிவை இணைத்துள்ளேன்.. ( Click Here)
சவால்கள் நிறைந்த பெண்களின் வாழ்க்கை :
" அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு" என்ற அந்த காலத்தில் முடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க தொடங்கினர் பேரும் சவால்களோடு..
இருபதாம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்து மகளிர் இல்லாத துறையே தற்போது இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளதே பெண்களின் வலிமையை வெளிப்படுத்தி உள்ளது...
காலத்தில் சூழல், குடும்ப நெருக்கடி, சமுதாயம் என்ற சவால்களை எதிர்கொண்டு தனக்கு உகந்த துறையை தேர்ந்தெடுத்து தங்களின் வெற்றி படியை நோக்கி உயர தொடங்குகின்றனர்..
ஆண்களின் மன வலிமையை விட பத்து மடங்கு என்பது பெரியது பெண்களின் மன வலிமை என்று பல நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது..
விளையாட்டு வீராங்கனை விளையாட்டிலும், தொழில்நுட்ப துறையிலும், தாயாகவும், மனைவியாகவும், விஞ்ஞானிகளாகவும், ஆசிரியராகவும், நடிகைகளாகவும் எடுக்கும் துறையில் பெரும் சவால்களையும் எளிதாக வென்று ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை அழுத்தமாக வெளிப்படுத்தி உள்ளனர்...
சமூதாயத்தில் பெருமைக்குரிய பெண்கள் படைத்த சாதனையை நினைத்து பெருமைபட்டாளும் தற்போது அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மூலம் நாடு சுதந்திரம் அடைந்தும் அதற்கான பலனை இன்னும் பெறவில்லை என்பதை அழுத்தமாக தெரியவந்துள்ளது...
நடு இரவில் ஒரு பெண் துணையின்றி நாட்டில் நடமாட முடியுமோ அன்று தான் உண்மையான சுதந்திரம் என்று கூறிய காந்தியடிகளின் கூற்று இன்னும் நிறைவேறவில்லை என்பது வெட்கப்படவேண்டியுள்ளது நம் சமூகம்..
மகளிரின் தனித்துவம்:
தந்தையை இழந்த மனைவி தன் குழந்தைகளுக்கு தந்தையாகவும் தாயாகவும் விளங்குகின்றார்..
தாயை இழந்த கணவனுக்கு தன் மனைவியே தாயாகின்றாள்...
தாய் தந்தையை இழந்த பெண் தன் சகோதரர்களுக்கு தாயிகின்றாள்...
மனைவியை இழந்து தவிக்கும் கணவருக்கு தன் மகளே தாயாகின்றாள்..
காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப தன்னை தானே செதுக்கும் மன உறுதியை பெற்றுள்ளனர் பெண்கள்..அப்படிப்பட்ட பெண்களை போற்றி பெருமைப்படுவோம்...
நன்றி,
என்னை தாயாய் வழிநடத்தும் என் சகோதரிகளுக்கும், என் தங்கைகளுக்கும், என் சமூக வலைதள சகோதரிகளுக்கும், என் உடன் பணி புரியும் நண்பர்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
🙏🙏❤️..
எழுத்து : தமிழரசன் சண்முகம்
வெளியீடு : செந்தமிழ் தென்றல்
9000 பார்வையாளர்களை கடந்தது செந்தமிழ் தென்றல் வலைதள பக்கம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே 🙏