யார் யார் ருத்ராட்சம் அணியலாம்?, ருத்ராட்சம் அணிந்து கொண்டு அசைவம் சாப்பிடலாமா?

வணக்கம் நண்பர்களே,

   மீண்டும் SSR பதிவில் இருந்து ருத்ராட்சம் யார் யார் அணியலாம், எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணியலாம் என்ற தகவலை பதிவாக வெளியிடுகின்றேன்....


ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம். ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.

தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

5 முகம் ருத்ராட்சம் பொதுவானது  அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,

ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்.


ருத்ராட்சமும் ஆன்மீகமும்


ருத்ராட்சமும் அதன் வகைகளும் click here 👉 ருத்ராட்சம் வகைகள்


நட்சத்திரத்திற்கான ருத்ராட்சம் :

       ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,

அஸ்வினி - ஒன்பது முகம்

பரணி - ஆறுமுகம்,பதிமூன்று முகம்

கார்த்திகை - பனிரெண்டு முகம்

ரோகிணி - இரண்டு முகம்

மிருக சீரிஷம் - மூன்று முகம்

திருவாதிரை - எட்டு முகம்

புனர்பூசம் - ஐந்து முகம்

பூசம் - ஏழு முகம்

ஆயில்யம் - நான்கு முகம்

மகம் - ஒன்பது முகம்

பூரம் - ஆறுமுகம்,பதிமூன்று முகம்.

உத்திரம் - பனிரெண்டு முகம்

ஹஸ்தம் - இரண்டு முகம்

சித்திரை - மூன்று முகம்

சுவாதி - எட்டு முகம்

விசாகம் - ஐந்து முகம்

அனுஷம்  - ஏழு முகம்

கேட்டை - நான்கு முகம்

மூலம் - ஒன்பது முகம்

பூராடம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

உத்திராடம் - பனிரெண்டு முகம்

திருவோணம் - இரண்டு முகம்

அவிட்டம் - மூன்று முகம்

சதயம் - எட்டு முகம்

பூரட்டாதி - ஐந்து முகம்

உத்திரட்டாதி - எழுமுகம்

ரேவதி - நான்கு முகம்.

        விலை சுமார் 50 ரூபாயில் இருந்து 2 லட்சம் வரை வியாபார நோக்கில் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் விற்பனைக்கு உள்ளது.

விலை கொடுத்து வசதி உள்ளவர்கள் மட்டுமே அணியும் பொருளாக ருத்ராட்சம் மாறிவிட்டது, 5 முகம் மட்டுமே விலை குறைவு காரணம் அதிகமாக விளைவதால்.

நம் உடலில் இருக்கும் எழு சக்கரங்களும் இந்த ருத்ராட்சங்களால் துரிதப்படுத்தப்படுகிறது. இது அனைத்து முக ருத்ராட்சத்திற்க்கும் பொருந்தும்.

ருத்ராட்சம் அணிந்து அசைவம் சாப்பிடலாமா ?..
திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா ?...

பலரின் சந்தேகம் எல்லாம் ஒரே மாதிரியாக திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, அசைவம் சாப்பிடலாமா என இருந்ததால் பதில் அளிக்க கடமைபட்டுள்ளேன்.

முந்தைய காலத்தில் சைவ சமயம், வைணவ சமயம், சமணர்களுக்கு இடையே பல பிரச்னைகள் நிலவி வந்தது.

சமணர்கள் சைவர்கள் வாழும் பகுதியை கைப்பற்ற அவர்கள் பின்பற்றி வந்த ஒழுக்க நெறிகளை சீர்குலைக்க நினைத்தனர்.

அப்படி சைவர்கள் சிவனின் அம்சமான ருத்ராட்சத்தை அணிவதை நிறுத்த சில வதந்திகளை கிளப்பிவிட்டனர்.

திருமணம் ஆன ஆண் பெண் தாம்பத்தியம் கொள்வதால் ருத்ராட்சம் அணியக் கூடாது, அப்படி அனிந்தால் சாமியார்களாகி விடுவார்கள் என்று பரப்பினார்கள்.

இல்வாழ்க்கைக்கும், ருத்ராட்சம் அணிவதற்கும் தொடர்பு இல்லை. ருத்ராட்சம் அணிவதால் தீய எண்ணங்கள், திருஷ்டி, வக்கிர பார்வைகள் நீங்கும். தைரியம் பிறக்கும்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அணிவது தவறில்லை மற்றும் புலால் தவிர்த்தல் நல்லது அது இன்னும் நமக்கு பயன்தரும்.
இப்பொழுது உள்ள அவசர உலகில் அசைவ உணவு தவிர்க்க முடியாத ஒன்று ஆக ருத்ராட்சம் அனிந்த பின் நடக்கும் மாற்றங்களுக்கு ஈசனே பொருப்பு.

இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம் அணிந்திருப்பது தவறில்லை...

நன்றி.‌..

நன்றி SSR சிவராஜ் அண்ணா...

வெளியீடு : செந்தமிழ் தென்றல்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads