வசூலை வாரி குவிக்கும் பிற மொழி படங்கள், தமிழ் சினிமாவால் போட்டி போட முடியாதது காரணம்?...

வணக்கம் நண்பர்களே,

     நீண்ட நாட்களுக்கு பிறகு ஓர் சினிமா பதிவை வெளியிடுகின்றேன்.. தற்போது சினிமா வட்டாரத்தில் நிலவி பிற மொழி படங்களின் வளர்ச்சியும் வசூலும் தமிழ் சினிமாவை விட அதிகமானதன் காரணமே இந்த பதிவு..


   கொரோனா காலத்தில் மிகுந்த பொருளாத சிக்கலை சந்தித்தது சினிமா துறை, அதன் பிறகு கொரோனா குறைந்த போதும் மக்கள் திரையரங்குகளுக்கு செல்ல மிகவும் தயக்கம்காட்டி வந்தனர்....

  தமிழில் வெளியான தளபதி விஜயின் மாஸ்டர் , சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் தனுஷின் கர்ணன் போன்ற முன்னனி நடிகர்கள் நடித்து வெளியான படங்கள் கொரோனா குறைந்த நேரத்தில் வெளியானது, படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தாலும் மக்கள் திரையரங்குளில் செல்ல தயக்கம் மட்டுமே காட்டினர்,

    அதன் பின் வெளியான சூப்பர் ஸ்டாரின் " அண்ணாத்த "திரைப்படம் 2021ம் ஆண்டு திபாவளி அன்று  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, சிறுத்தை சிவாவின் விஸ்வாசம் திரைப்படம் போல குடும்ப படமாக வெளிவந்த அண்ணாத்த குடும்ப பார்வையாளர்களை கவர்ந்து தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் 34.94கோடி  என்ற பெரும் சாதனை படைத்தது, கொரோனாவிற்கு பிறகு வெளிவந்து தமிழ் சினிமாவில் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது, கொரோனாவிற்கு பிறகு தான் தமிழ் சினிமா தலை நிமிர தொடங்கியது...

அண்ணாத்த விமர்சனமும் வெற்றியும் ( Read More Click )

   அதன் பின் வெளிவந்த PAN INDIA படமான அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா வெளியாகி வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது, அதற்கு பின் வெளியான PAN INDIA படமான ராஜமெளலியின் RRR படமும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது அதுமட்டும் இன்று World wide 1000 கோடி என்ற சாதனையை நிகழ்த்தியதுள்ளது.

RRR படத்தின் 1000கோடி வசூல் Announcement


   அதன் பின் வெளியான தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 14.04.2022ம் நாள் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது, வெளியான முதல் நாளில் 26+ கோடி மட்டுமே வசூல் செய்து வியாபார ரீதியாக சரிவை சந்தித்து வருகின்றது, இதற்கு முன் வெளியான அஜித்குமார் நடித்த "வலிமை" திரைப்படம் 36+ கோடி என்ற முதல் நாள் வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

    இதே நேரத்தில் கன்னட திரைப்படமான KGF Chapter 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் 15.04.2022ம் நாள் ரிலிஸ் ஆனது, KGF2 படம் வெளியாவதற்கு முன்பே வசூலை தொடங்கியது, ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே ரிலீஸ் ஆன பீஸ்ட் திரைப்படத்திற்கு அதிக திரைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது, பின் பீஸ்ட் படத்தின் எதிர்மறை விமர்சனங்களால் KGFஉடன் போட்டி போட முடியாமல் பீஸ்ட் திரையிடும் திரைகள் குறைக்கப்பட்டு KGF திரையிடும் திரைகள் தமிழகத்தில். இரண்டு முதல் மூன்று மடங்காக அதிகரிப்பட்டு வருகின்றது..

    இதிலிருந்து தெரிவது பிற மொழி படங்களான பாகுபலி, புஷ்பா, RRR, KGF2 போன்ற Pan India படங்கள் ரசிகர்களை கவந்தது மட்டும் இன்றி வசூலிலும் வாகை சூடி வருகின்றது, ஆனால் தமிழ் சினிமா ரஜினிகாந்த் நடித்த கபாலி 600+ கோடி வசூலும், சூப்பர் ஸ்டார் மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 திரைப்படம் உலக அளவிலான வசூலை 800+ கோடி என்ற சாதனையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் சூப்பர் ஸ்டாரின் கூட்டணியான 2.0 திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவில் தமிழ் சினிமாவின் தரம் உயர்ந்தது, ஆனால் அதன் பின் வெளியான தமிழ் படங்கள் வியாபார ரீதியாக பிற மொழி படங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனதுக்கான காரணம் இயக்குனர் பற்றாகுறையா, திரைக்கதையா, நடிகர்களா என்ற பெரும் கேள்வியை எதிர்கொள்கின்றோம்..

தமிழ் சினிமாவின் வளர்ச்சியை பார்த்த பிறகு தமிழ் சினிமாவின் இந்த நிலைக்கு காரணத்தை பற்றி பார்ப்போம்...

தமிழ் சினிமாவின் வளர்ச்சி :

          புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி என்ற பெரும் நடிகர்கள் ஆண்ட திரையுலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்தி, மோகன், சிவக்குமார், ராமராஜன் ஆகியோர் 1970 முதல் 1990 வரை காலங்களில் திரையுலகில் உலா வந்தனர், அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முன்னணி கதாநாயகர்களாக வலம் வந்தனர் , அதன் பின் வந்த காலத்தில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் போன்றோர் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தது கொண்டிருந்தனர், அதே காலத்தில் அஜித்குமார், விஜய் என்ற இளம் நடிகர்களாக திரைத்துறையில் அறிமுகமாகினார்கள்..

    2000ம் ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மட்டுமே உச்ச நட்சத்திரமாக ஜொலித்தாள்.. 2000க்கு பின் வெளியான ரஜினியின் திரைப்படங்களில் பாபா தவிர மற்ற திரைப்படங்கள் வியாபார ரீதியாக பெரும் பெரும் வெற்றி பெற்றது, இதே நேரத்தில் வெளியான அஜித் மற்றும் விஜய் நடித்து வெளியான படங்களில் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிக்கு தந்தனர்..

     ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி 804 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது, பின் இணைந்த ஷங்கர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான சிவாஜி தமிழ் சினிமாவின் 100கோடி என்ற இமாலய சாதனை படைத்தது, பின் மீண்டும் இணைந்த ஷங்கர் கூட்டணி எந்திரன் படம் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது, இதன் மூலம் இந்திய சினிமா தமிழ் சினிமாவை திரும்பி பார்த்தது, தமிழ் சினிமா பெரும் வளர்ச்சியை தந்தது, பின் ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான கபாலி உலக அளவில் 600+ கோடி என்ற மைல் கல்லை என்ற அடையாளத்தை தமிழ் சினிமாவிற்கு அளித்தது, கபாலி சாதனையை முறியடித்தது ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியிலான 2.0 திரைப்படம் 800+ கோடி என்ற மிக பிரமாண்ட வசூலில் மூலம் தமிழ் சினிமா வாகை சூடியது, இது வரை ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தின் வசூலை எந்த தமிழ் சினிமாவும் முறியடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது...இதன் மூலம் அறிவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரையுலக பங்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது...

    இதற்கு பின் வெளியான‌ தமிழ் நடிகரின் திரைப்படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற மொழி திரைப்படம் போல் தமிழ் சினிமா முன்னேறவில்லை...காரணம் பின் வரும் பத்தியில்....

    தமிழ் சினிமா மற்ற மொழி சினிமாவுடன் ஒப்பிடும் போது சலைத்தது இல்லை என்பதை வெளிப்படுத்தவே மேல தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்பதை குறிப்பிட்டுள்ளேன்....

தமிழ் சினிமா மற்ற மொழி சினிமாவுடன் போட்டி போட முடியாததன் காரணம் :

1.திரைக்கதையா ?
2.இயக்குனரா ?
3.நடிகர்களா ?
4.தயாரிப்பாளர்களா?...

5.ரசிகர்களா?....
  
   யார் காரணம் ...?????

     முன் குறிப்பிட்டுள்ள முன்னணி கதாநாயரின் திரைப்படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வசூல் ரீதியில் வெற்றி பெற்றுள்ளது, என்பதை வைத்து தெரிவது இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ இந்த நிலைக்கு காரணம் இல்லை..

      கதாநாயகர்களும் வெற்றியில பெரும் பங்கு வகிக்கின்றனர், ஆனால் பல வெற்றி படங்களை தந்த ரஜினிகாந்தின் எல்லா படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுவிடவில்லை...

     டாக்டர், கர்ணன், மாஸ்டர், அண்ணாத்த, வலிமை போன்ற படங்கள் நல்ல கதை அம்சங்களை கொண்டிருந்தாலும், ஏன் மற்ற மொழி திரைப்படங்களிலை போல பிரம்மாண்டமான வெற்றியை பெற முடியவில்லை...

   நல்ல கதை, நல்ல இயக்குனர், சிறந்த நடிகர் போன்ற அனைத்தும் இருக்கும் சில படங்கள் கூட பிரம்மாண்ட வெற்றியை பெறுவதில்லை...காரணம் ??..

    நல்ல படங்களை கூட சுய விளம்பரத்திற்காக விமர்சனம் செய்யும் சமுக ஊடக குண்டர்களாலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களாலுமே தமிழ் சினிமா சில வருடங்களாக தமிழ் சினிமாவால் மற்ற மொழி திரைப்படத்துடன் போட்டி போட முடியவில்லை...

    சிறந்த திரைப்படத்தை கூட சில நடிகரின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் YouTube Reviewer என்ற போர்வையில் இருக்கும் குண்டர்கள் படத்தின் மீது எதிர்மறை கருத்துக்களை திணித்து அந்த படத்தை திட்டமிட்டு தோல்வியுற செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்..

   ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாத்த, அஜித் நடித்து வெளியான வலிமை மற்றும் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வரை எதிர்மறை விமர்சனங்களை திணித்து வருகின்றனர்.. இந்த எதிர்மறை விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்றது அண்ணாத்த மற்றும் வலிமை..ஆனால் இந்த எதிர்மறை விமர்சனங்களால் பீஸ்ட் திரைப்படம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, காரணம் KGF-யின் வெற்றியா இருந்தாலும் பெரும் பங்கு அந்த எதிர்மறை விமர்சனமே ஆகும்..

விமர்சனங்களை தாண்டி வென்ற வலிமை

காரணம்? ...

   ரசிகர்கள் தங்களின் நடிகரை கொண்டாட வேண்டும் என்பதற்காக மற்ற ரசிகர்களின் கதாநாயகர்களின் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் செய்யும் நபர்களை ஆதரிப்பதே ஆகும்..

    விஜயின் ரசிகர்கள் மற்ற நடிகர்களின் படங்களுக்கு எதிர்மறை விமர்சனத்தை அள்ளி தெளித்த விஷப்பூச்சிகளை ஆதரித்ததே இன்று பீஸ்ட் படத்தின் அறுவடை செய்துள்ளனர்...

   சமூக ஊடகங்களில் தங்கள் ஆஸ்தான கதாநாயகனை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் கதாநாயகனுக்கு போட்டியே இல்லாத நடிகரை தரம் தாழ்த்தி விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்...இதனை வைத்து ஏற்கனவே உச்ச நட்சத்திரமாக உள்ள நடிகரை வென்று விட்டதாக நினைத்து தங்களின் ஆஸ்தான நடிகரின் மீது மற்ற ரசிகர்களின் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர்...இதுவே தற்போது தமிழ் சினிமாவில் நிலவி வரும் சூழலுக்கு காரணம்...

நம் மொழி சினிமா உணர்வு :

        எந்த நடிகரின் திரைப்படமாக இருந்தாலும் நம் மொழிதிரைப்படம் என்ற உணர்வு வேண்டும்..

      எதிர்மறை விமர்சனங்களை யூடிபில் வெளியிடும் நபர்களிடம் இருந்து தள்ளி நின்று, நம் ஆதரவை நிறுத்த வேண்டும்...

      மற்ற நடிகரின் படத்தை நம் மொழி படம் என்று கொண்டாட வேண்டும்...

     ரசிக சண்டையில் இருந்து தள்ளி நிற்க வேண்டும்..

     இது போன்ற சிலவற்றை நாம் நிறுத்திகொண்டாலே நம் மொழி சினிமாவின் தரத்தையும் வியாபாரத்தையும் உயர்த்தலாம்...

இது என் தனிப்பட்ட கருத்தே ஆகும்...

நன்றி,

வெளியீடு : தமிழரசன் சண்முகம்

    

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை

Google auto Ads